தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 25, 2021, 9:06 PM IST

1. இணையத்தில் வைரலாக பறந்துவரும் சினேகா துபே - யார் இவர்?

ஐநா மன்றத்தில் இந்திய தரப்பில் தனது வாதத்தை முன்வைத்த மன்றத்தின் இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே, இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இவரது ஐநா மன்ற உரை இந்தியர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2. IPL 2021: டெல்லியின் பவர் பேட்டிங்கை கட்டுப்படுத்திய ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது.

3. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

மனமிருந்தால் போதும் எதையும் வெல்லலாம் என குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாற்றுத் திறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

4. கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மாணவி குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

5. பருவமழை முன்னெச்சரிக்கை - களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

6. திட்டமிட்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சியில் இரண்டு அதிமுக மாவட்ட வார்டு உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. பைடன் அடித்த ஜோக்; சிரிப்பு மாளிகையாக மாறிய வெள்ளை மாளிகை!

பைடன், மோடி கூட்டாக செய்தியாளரை சந்தித்தபோது, பைடன் கூறிய நகைச்சுவை மோடி, செய்தியாளர்கள் உள்பட அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திய சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

8. 90 வயதில் கார் ஓட்ட கற்றுக்கொண்டு அசத்திய பாட்டி

மத்திய பிரதேசத்தில் 90 வயது பாட்டி ஒருவர் காரை ஓட்டி அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

9. ஆட்டத்தை தொடங்கிய தாலிபன் - ஆப்கனில் மீண்டும் கடுமையாகும் கொடூரச் சட்டங்கள்

கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள் என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உள்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.25) நடைபெறும் 20 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details