தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 22, 2021, 9:55 PM IST

1. விரைவில் கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

டெல்லி: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

2. IPL 2021: டாஸ் வென்றார் வில்லியம்சன்; டெல்லி பந்துவீச்சு

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

3. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை பிணை

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 8,9ஆவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் கூடுதல் விசாரணைக்கு ஆஜராகினர்.

5. 100 சிறுவர்கள் காந்தி முகமூடி அணிந்து ஊர்வலம்

மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சி நிகழ்ந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் 100 சிறுவர்கள் காந்தி முகமூடி அணிந்து அவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

6. காண்டாமிருக கொம்போடு ட்ரோனையும் எரித்த முதலமைச்சர்

காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் அசாம் மாநில அரசின் நிகழ்வில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்ரோன் இயந்திரத்தை நெருப்பில் செலுத்தி விபத்துக்குள்ளாக்கினார்.

7. கோட்டாபயவின் அறிவிப்பு ஏமாற்று நாடகமே - பழ.நெடுமாறன்

ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்சே மிகத் தந்திரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நாட்டிற்கு அவர் திரும்பிச் சென்ற பிறகு சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்பார் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை எனப் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

8. வடகிழக்கு பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதமான முறையில் எடுத்துவருவதாக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

9. கஸ்தூரி ரங்கன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு

தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழுவை கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

10. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டிக் கொலை

திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணை வெட்டிக் கொலை செய்து, தலையை துண்டாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details