தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm

By

Published : Sep 21, 2021, 8:54 PM IST

1. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த பன்னீர் செல்வம்

நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த கருங்கற்கள், சிமெண்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதால், அரசுப் பணம் வீணடிக்கப்படும் நிலை உள்ளது. அதனைத் தடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

2. ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பட்டதாரி தூய்மைப் பணியாளருக்கு அரசு வேலை!

ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தி எதிரொலியாக முதுநிலைப் பட்டதாரியான தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு அரசு வேலையை ஒதுக்கி, அதற்கான பணிநியமன ஆணையை தெலங்கானா மாநில அமைச்சர் ராமா ராவ் வழங்கியுள்ளார்.

3. பெங்களூரு தீ விபத்து: பதைபதைக்க வைக்கும் காணொலி!

பெண் ஒருவர் குடியிருப்பிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் காணொலி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
4. வனத்தைப் பாதுகாப்பது அவசியம் - உயர் நீதிமன்றம்

மனித குலத்திற்குப் பயனளிக்கும் வனத்தைப் பாதுகாப்பது அவசியம். வனப்பகுதி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றும் நடவடிக்கையைத் தொடரலாம் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5. தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு - ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

6. மண்டபம் கடலில் விடப்பட்ட நான்கு லட்சம் இறால் குஞ்சுகள்

ராமநாதபுரம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நான்கு லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விட்டப்பட்டது.

7. சட்ட விரோத குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு - அபராதம் விதிக்க உத்தரவு

சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8.பள்ளி மாணவர்களுக்கு கரோனா : தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடல்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன

9. IPL 2021 PBKS vs RR: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச முடிவு!

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

10. ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு: புதிய கூட்டமைப்பு உருவாக்கம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் கருதி , தேனாண்டாள் முரளி தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், பாரதிராஜா தலைமையிலான நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details