தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm

By

Published : Sep 19, 2021, 9:03 PM IST

1.கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்கியிருந்தால் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2.தமிழ்நாட்டில் மேலும் 1,697 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,697 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

3.இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் கடல் அட்டை பறிமுதல் !

மண்டபம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த தடை செய்யப்பட்ட ஒன்றை டன் கடல் அட்டையை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

4.பெறியியல் படிப்பு இடஒதுக்கீடு - முதலமைச்சர் சேர்க்கை ஆணை வழங்குகிறார்

இடஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாளை (செப்.20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணையை வழங்குகிறார்.

5.பி.இ, பி.டெக் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

பி.இ, பி.டெக் பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு சுற்று வாரியாக நடைபெறும் தேதியை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

6.பஞ்சாப் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு!

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7.உணவு டெலிவரி செய்ய வந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு!

ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய கொண்டு சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், செல்போன், ஏ.டி.எம் கார்ட் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
8.மஞ்சள் கடத்திய ஆறு மீனவர்கள் கைது

இலங்கைக்கு மஞ்சள் கடத்திய, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9.IPL 2021 CSK vs MI: சென்னை பேட்டிங்; ரோஹித் மிஸ்ஸிங்

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

10.'பேய காணோம்' - மீரா மிதுனுக்காக காத்திருக்கும் படக்குழு!

'பேய காணோம்' படத்தின் நாயகி மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்தவுடன், படத்தின் இதர 10 விழுக்காட்டு காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details