தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 15, 2021, 9:18 PM IST

1. ’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவச் செல்வங்களே, மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், #நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

2. ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3. அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி, சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

நீட் தேர்வு அச்சத்தால் நிகழும் மாணவர்கள் மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

5. சிபிஎல்லில் காயம்: சிஎஸ்கேவில் ஆடுவாரா டூ ப்ளசிஸ்?

சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூ ப்ளசிஸுக்கு காயம் காரணமாக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

6. தொலைத் தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தொலைத் தொடர்பு துறையில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7. வைரலாகும் வீடியோ: சிக்னலில் நடனமாடிய ஆடிய இளம்பெண்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. 'ரெட் சிக்னல்' போட்ட உடன் அந்த பெண் நடுரோட்டில் வந்து நடமானடியது வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

8. நகைக்கடன் தள்ளுபடி: திருத்தப்பட்ட விவரங்களை கோரிய கூட்டுறவுத் துறை

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பயனாளர்களின் திருத்தப்பட்ட விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது.

9. சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

10. நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா (17) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு எழுதிய பின், இரண்டு நாள்களாக மாணவி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மதிப்பெண் குறைந்துவிடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details