தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 9, 2021, 9:29 PM IST

1, தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: எவைக்கு அனுமதி

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏற்னவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகம் முழுவதும் பயணம் - மு.க.ஸ்டாலின்

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

3, உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்

தினமும் வால்நட்ஸ் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆய்வுகளும் வால்நட்ஸ் இதய நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது என்று தெளிவுப்படுத்தி இருக்கிறது.

4, ’பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு உருவெடுக்கும்’ - பிரதமர் மோடி

வருங்காலத்தில் உலகின் பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு விளங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5, முட்டை ஓடு முதல் இசைக்கருவி வரை விநாயகர் உருவம்... அசத்தும் கள்ளக்குறிச்சி கலைஞர்!

கள்ளக்குறிச்சி: முட்டை ஓடு முதல் இசைக்கருவி வரை பல பொருள்களைக் கொண்டு விநாயகர் உருவம் செய்து கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் அசத்தி வருகிறார்.

6, சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலை - முதலமைச்சர் விளக்கம்

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் போது கண்டிப்பாக நேரலை செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

7, சிங்கத்தை அடுத்து ’யானை’... மச்சான் அருண் விஜயை வைத்து முதல் படம் இயக்கும் ஹரி!

இயக்குநர் ஹரி, நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

8, எல்லை தாண்டிய பாகிஸ்தான் சிறுவன்... பத்திரமாக திருப்பி ஒப்படைத்த இந்தியா

விளையாடும்போது எல்லை தாண்டிய பாகிஸ்தான் நாட்டுச் சிறுவனை, இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீண்டும் ஒப்படைத்தனர்.

9, ’அண்ணாமலைக்கு விநாயகர் அருள்பாலிக்க வாய்ப்பு’ - எம்.பி சு.வெங்கடேசன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொருநை நதி நாகரிகம் பற்றிய முதலமைச்சரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைத்தால் விநாயகப் பெருமான் அருள்பாலிக்க வாய்ப்புள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

10, பினாமி சொத்து விவகாரம் - நெருக்கடியில் சசிகலா

சசிகலாவின் பையனூர் பங்களா வருமானவரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details