தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top Ten 10 @ 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 2, 2021, 9:03 PM IST

1. தமிழ்நாட்டில் மேலும் 1,562 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஆயிரத்து 562 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 17 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

2. 'போலி'கள் இனி காலி - புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

போலி பத்திரப் பதிவுகளை ரத்துசெய்ய அதிகாரம் வழங்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று (செப்டம்பர் 2) சட்டப்பேரவையில் நிறைவேறியது.

3. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநரின் வழக்குத் தள்ளுபடி

பினாமி சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் தாக்கல்செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி ஊழியர்கள் போராட்டம்

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5. பள்ளிகளை அடைத்திருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - ஆசிரியர்கள் தவிப்பு

சட்டப்பேரவை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளதால், தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

6. அதிமுக ஆட்சியில் நிதி எங்கு சென்றது? - புள்ளிவிவரத்தை அடுக்கிய மா.சு.

திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆனால் அதிமுக ஆட்சியில் நிதி எங்கு சென்றது எனத் தெரியவில்லை என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

7. 'மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்துசெய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்'

விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகளுக்கு வசூலிக்கும் ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்துசெய்ய கோரி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கேட்டுக்கொண்டார்.

8. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் - மாணவனின் கேள்விக்கு அண்ணாமலை பதில்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்படுவது குறித்து மாணவன் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.

9. கே.டி. ராகவனைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவனைக் கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

10. உடனே பாடம் எடுக்க வேண்டாம் - ஆசிரியர்களுக்கு லியோனி அறிவுரை

நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு நேரடியாகப் பாடம் எடுக்காமல் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி அறிவுரை வழங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details