தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 23, 2021, 9:42 PM IST

1. கேந்திரிய வித்யாலயாவில் கட்டண வசூல்? - சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆனால் கல்விக் கட்டணத்தை அதற்கு நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.

2. தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

3. ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழிலதிபரின் மகன் - அதிர்ச்சி தகவல்

காங்கேயம் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு, ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்டுள்ளார்.

4. பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை

பொதுமக்களுக்கு இடையூறாகப் பேனர் வைக்கக்கூடாது; வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற தனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

5. கரோனா மூன்றாம் அலையை தடுக்க 1 லட்சம் வெற்றிலைகளில் நூதன வழிபாடு!

தோகைமலை அருகே பெரியகாண்டியம்னுக்கு கரோனா 3ஆவது அலை ஏற்படாமல் தடுக்க 1,00,108 வெற்றிலையில் அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.

6. திரையரங்குகளை செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி - பாரதிராஜா!

50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளை செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

7. சென்னையில் ஆக.26ஆம் தேதி மநீம ஆலோசனைக் கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. பள்ளிகளை தயார் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளிகளில் துப்புரவு பணிகளை வெள்ளிக்கிழமைக்குள் (ஆக.27) முடிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

9. சிறைக்குள் அதிசயம்; உல்டா சந்திரமுகியான மீரா மிதுன்!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை (ஜாமின்) மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10. காணாமல் போன 4 வயது சிறுவன்... வாட்ஸ்அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

காணாமல் போன 4 வயது சிறுவன் குறித்த தகவலை வாட்ஸ்அப் குழு மூலம் அனுப்பி 5 மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல் துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details