தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 4, 2021, 9:45 PM IST

1 ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற போதைப் பொருள் மீட்பு - இருவர் கைது

சென்னையில் கொரியர் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருளை கடத்த முயன்ற இருவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 2.45 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன!

புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 21 பார்சல்களில், 2 லட்சத்து 45 ஆயிரத்து 345 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.

3 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும், 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள நெல்லை தயார் - ஆட்சியர் விஷ்ணு

கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

5 ரயிலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.4.25 லட்சம் பணம், 17 கிலோ வெள்ளி பறிமுதல்

புருலியா விரைவு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.4.25 லட்சம் பணம், 17 கிலோ வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

6 பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ் கடும் தாக்கு

தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சௌத்ரி, டெல்லி பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளியாக மாறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டினார்.

7 தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி - மிசோரம் மாநில கலெக்டர்

அஸ்ஸாம் மற்றும் மிசோரம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இரு மாநிலங்களும் தங்களின் நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த கள நிலவரங்களை ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் கெளதம் பகிர்ந்துள்ளார்.

8 ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஒரு நபர் பல இடங்களில் வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் திட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளது.

9 உத்தரகண்டில் நிலநடுக்க செயலி அறிமுகம்!

நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகண்டில் நிலநடுக்க செயலி (உத்தரகண்ட் பூகம்ப எச்சரிக்கை) அறிமுகப்படுத்தப்பட்டது.

10 பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details