தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணிச் செய்தி சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணிச் செய்தி சுருக்கம்

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Jul 9, 2021, 9:02 PM IST

1.விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும், இ-பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 500 மரங்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


2.அநீதியான மறுக்கப்பட்ட பிணை: ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?

பிணை கோரியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார்.

3.ஒலிம்பிக்கில் பங்கேற்கும் காவலரின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்த டிஜிபி

காவலராக பணிபுரிந்துகொண்டே, ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள தமிழ்நாடு தடகள வீரர் நாகநாதனை பாராட்டும் வகையில், அவரது பெற்றோரை நேரில் சந்தித்து காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு பாராட்டுக்களை தெரிவித்தார்.


4.எப்போது குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே

குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து எப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்னும் கேள்வி எழுந்துள்ளது.

5.ஓட்டுநர் உரிம சட்ட திருத்தத்திற்கு தடைக்கோரி வழக்கு

ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றாலே ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்னும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


6.தண்ணீர் தேடி வந்த யானை - போக்குவரத்து பாதிப்பு!

கோவை ஆனைகட்டி அருகே செங்கல் சூளையில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை ஆண் யானை சாலை அருகே நின்றதால் கோவை ஆனைகட்டி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


7.பீமா கோரேகான் வழக்கு: சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடிவு

பீமா கோரேகான் மோதல் வழக்கு தொடர்பாக சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.

8.பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை... ஜாலியாக சுற்றும் மக்களே உஷார்!

கரோனா பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்றும், யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் எச்சரித்துள்ளார்.


9.”பயிர் காப்பீட்டுத் தொகையை பருவ காலத்திலேயே வழங்கவேண்டும்” - ஜி .கே. வாசன்

விவசாயிகளின் பயிர் காப்பீடு இழப்பீட்டை அந்தந்த பருவத்திலேயே தமிழ்நாடுஅரசு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.


10.’நவரசா படத்திற்கு யாரும் சம்பளம் வாங்கவில்லை’ - மணிரத்னம்!

திரையுலக நன்மைக்காக எடுக்கப்பட்டுள்ள நவரசா ஆந்தாலஜி படத்திற்காக யாரும் சம்பளம் பெறவில்லை என மணிரத்னம் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details