தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

By

Published : Mar 24, 2021, 9:28 PM IST

இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைந்த வஜ்ரா கப்பல்!

எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய வஜ்ரா கப்பல், இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்வு இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

’ 5 வருசம் கழிச்சு தான் வருவீங்க’; திரும்பி சென்ற எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏவிடம், பெண்கள் கேள்வி எழுப்பியதால், அவர் திரும்பி சென்றார்.

இதுவரை ஒன்றரை லட்சம் ரயில் பாதை மேம்பாலங்கள்...! - இந்திய ரயில்வே

ரயில் பாதையில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 390 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வேயின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,636 பேருக்குப் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) புதிதாக 1,636 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் வேலை தேடுபவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆன்லைனில் வேலை தேடுபவர்களை குறிவைத்து போலியான வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனம் மூலம் மோசடி செய்த இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை; காதலன் கைது!

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுடைந்த இளம் பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

2ஆவது ஒருநாள் போட்டி: மோர்கன், பில்லிங்ஸ் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

மகனின் முதல் பிறந்தநாள் - நல்லகண்ணுவிடம் ஆசிபெற்ற ராஜு முருகன்!

தனது மகனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்து இயக்குநர் ராஜு முருகன் ஆசிபெற்றார்.

தேசிய விருதுபெற்ற கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து!

உங்கள் அனைவரின் அங்கீகாரம் நம் தமிழ் சினிமாவைப் பெருமைகொள்ளச் செய்திருக்கிறது என இயக்குநர் பாரதிராஜா தேசிய விருது வென்ற கலைஞர்களைப் பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details