தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

By

Published : Mar 17, 2021, 8:56 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் அணியினர்

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து பிரிந்து, தாய் கட்சியான காங்கிரஸுக்கு ஆதரவு நல்கியுள்ளது.

கருணாநிதி பெயரில் பெரிய நூலகம்! - மு.க.ஸ்டாலின் உறுதி!

தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மதுரையில் கருணாநிதி பெயரில் பெரிய நூலகம் உருவாக்கப்படும் என பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சொந்த பந்தங்களை சந்திக்க சொந்த ஊருக்குச் செல்கிறார் சசிகலா

கிட்டத்தட்ட ஒரு மாத கால ஓய்விற்கு பின் திடீர் பயணமாக சசிகலா, இன்று தனது சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களை சந்திக்க உள்ளார்.

மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததில் கூட்டுச்சதி ஏதுமில்லை! - தமிழக அரசு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பிற்கான இடங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்ததில் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி ஏதும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2% கட்சி என்ற நிலையை மாற்றுமா பாஜக?

நாட்டையே ஆளும் பாஜகவால் சொல்லும்படியான ஓர் இடத்தை தமிழகத்தில் இன்னும் பிடிக்க முடியவில்லை.

"வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள் ஸ்டாலினிடம் கேளுங்கள்"- ஆதி ராஜாராம்

வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஸ்டாலினிடம் கேளுங்கள் என கொளத்தூர் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்கல.. கேட்ட ஊழியர்களை தாக்கிய வாடிக்கையாளர்கள்

அரூர் சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ள நியூ பஞ்சாபி தாபாவில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் உணவக ஊழியர்கள் மீது இருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் ஐந்தாம் இடத்தில் கோலி !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தேசிய தடகள சாம்பியன்ஷிப்: பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு!

தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற தடை ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமணி, மகளிர் பிரிவில் கனிமொழி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

திரைப்பட தயாரிப்பில் களமிறங்கிய அமேசான்!

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும் ’ராம் சேது’ திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details