தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9 PM - ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Feb 2, 2021, 9:19 PM IST

பிப்ரவரி 18 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள ராமோஜி பிலிம் சிட்டி

ராமோஜி பிலிம் சிட்டி' தனது சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உள்ளது. விடுமுறை கழிப்பதற்கு ஏற்ற, புகழ்பெற்ற இடமான ராமோஜி பிலிம் சிட்டி பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளது.

சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.

டார்ச் லைட் சின்னம் கேட்ட வழக்கை திரும்பப்பெற்ற மநீம

சென்னை: தமிழ்நாட்டில், பேட்டரி டார்ச் லைட் சின்னம் கிடைத்ததை தொடர்ந்து, அச்சின்னத்தை ஒதுக்க கோரி தாக்கல் செய்த வழக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி திரும்பப் பெற்றது.

இங்கிலாந்தில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கரோனா!

சென்னை: இங்கிலாந்தில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உருமாறிய கரோனா வைரஸ் தொற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு

சேலம்: கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

சென்னை: சிங்கப்பூா் மற்றும் துபாய் நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைதாகியுள்ளனர்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டு !

ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோவில் பயணிகள் பயன்பாடு அதிகரிப்பு!

சென்னை: மெட்ரோ ரயில் சேவையை கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் விவசாயி கொலை: காவலர்கள் விசாரணை!

ராஜஸ்தான்: தோல்பூரில் ஆறு பேர் ஒன்று சேர்ந்து விவசாயியை கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

சென்னை முதல் டெஸ்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சென்னை டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனத் தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details