தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - மாலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்..

மாலை 9 மணி செய்திச் சுருக்கம்
மாலை 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 16, 2020, 8:56 PM IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு 19ஆம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் வருவாய்த்துறையினர்

விழுப்புரம்: வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருவதாக, விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.

கால்நடைத்துறையில் காலி பணியிட போலி விளம்பரம்; நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

கால்நடை துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு பணம் பறித்து வரக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி தொல்லை: தமிழ் ஆசிரியர் தற்கொலை!

ராமநாதபுரம்: பாம்பன் அருகே கந்துவட்டி தொல்லை காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா - நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கிய துறவி தற்கொலை!

டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரகிட... ரகிட... வைரலாகும் கரோனா பாதித்த குழந்தையின் உற்சாக நடனம்!

போபால்: கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சுகாதார ஊழியர்களுடன் நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

'டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொலையாளி, பயங்கரவாதி' - ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி சாடல்

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார் என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி கடுமையாக சாடியுள்ளார்.

நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்த ஹாக்கி கேப்டன்!

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், தனது நீண்ட நாள் காதலியான மலேசியாவின் இல்லி சித்திக்கை சீக்கிய முறைப்படி இன்று திருமணம் செய்துகொண்டார்.

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: மெகா ஸ்டாரை வைத்து இயக்கும் மோகன் ராஜா

மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details