தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm

By

Published : Jul 7, 2020, 9:01 PM IST

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் அமைச்சர் நாற்காலிச் சண்டை

போபால்: மத்தியப் பிரதேச பாஜகவிற்குள் தொடரும் அமைச்சர் பதவிக்கான போட்டி மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'குற்றத் தலைநகராகும் உ.பி.; விவரங்களை மறைக்கும் முதலமைச்சர்' - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை மறைப்பதைத் தவிர உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேறு எந்த வேலையும் செய்வதில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனாவைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை!

கரோனா பரிசோதனையின் கட்டணத்தைக் குறைக்கும் வண்ணமாக பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளது.

'தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை' - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் கல்வி உதவித் தொகை எவ்வாறு குறைத்து கணக்கிடப்பட்டது?

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என, விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடிக்கு பிறந்தநாள் பரிசாக மினியேச்சர் மோடி- பொற்கொல்லருக்கு பாராட்டு

சேலம்: பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக வெள்ளியில் சிறியதாக சிலை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த பொற்கொல்லர்.

3 கோடி ஃபாலோயர்களை கடந்த வருண் தவான்!

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனியின் மூன்று முக்கிய முடிவுகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், ஆட்டத்தின் முடிவை மாற்றிய அவரது மூன்று முக்கிய முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்...

ஐந்தாம் நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அழுத்தம் தரும் சீன அரசு: பல ஆயிரம் செயலிகளை நீக்கிய ஆப்பிள்!

பெய்ஜிங்: சீன அரசின் புதிய இணையக் கொள்கை காரணமாக பல ஆயிரம் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details