தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - டெல்லி மருத்துவமனை மீது புகார்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9 pm
Top 10 news @ 9 pm

By

Published : Jun 27, 2020, 8:57 PM IST

'உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறும் தூத்துக்குடி' - ஸ்டாலின் காட்டம்

தூத்துக்குடி: எட்டயபுரத்தில் காவல் துறையினர் அடித்ததில் மனமுடைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறிவருகிறது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் கீழ், தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை இயந்திரம் பற்றாக்குறை - விருதுநகரில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்

விருதுநகர்: கரோனா பரிசோதனை இயந்திரம் பற்றாக்குறை காரணமாக பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என கரோனா சிறப்பு அலுவலர் மதுமதி தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருள்கள் என்ற பெயரில் போதை மாத்திரைகள் கடத்தல் - சுங்கத்துறை அதிரடியால் சிக்கிய நபர்!

சென்னை: வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மோசமாகக் கையாளப்படும் கரோனா மாதிரிகள்: டெல்லி மருத்துவமனை மீது புகார்

டெல்லி: கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை மோசமாகக் கையாண்டதாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு செயலாளர் சுட்டுக்கொலை!

போபால்: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனப் பொருள்களை நிராகரிக்க உறுதிபூண்ட கிராமம்!

புனே: கோண்ட்வே-தவாடே என்ற கிராமத்தில் சீனப் பொருள்களை நிராகரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: மிதக்கும் கிராமங்கள்

கவுகாத்தி: அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மாஸ்க் அணிந்த பல்வாள் தேவனும் பாகுபலியும்!

முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜமௌலி வெளியிட்ட வீடியோவில், பாகுபலி-2 கிளைமாக்ஸில் பல்வாள் தேவனும் பாகுபலியும் முகக்கவசம் அணிவது போன்ற காட்சி அமைந்துள்ளது.

கிறிஸ்தவ முறைப்படி 3ஆவது திருமணம் செய்துகொண்ட வனிதா!

சென்னை:நடிகை வனிதாவின் திருமணம் இன்று அவரது வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி எளிமையாக நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details