தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - international

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 pm news
9 pm news

By

Published : Jun 26, 2020, 9:01 PM IST

காவல்துறையினரின் மிருகத்தனமான செயல் ஒரு பெருங்குற்றம் - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி

காவல்துறையினர் மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதன் மூலம் பெருங்குற்றத்தை செய்துள்ளனர் என சாத்தான்குளம் சம்பவத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

'தமிழைச் சரியாகப் பேசுங்கள் முதலமைச்சரே' - பொன்முடி தாக்கு

விழுப்புரம்: தமிழைக் கூட சரியாகப் பேசாமல் வாய்க்கு வந்ததை உளறுவதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சருக்கு பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

'சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை' - உதயநிதி காட்டம்

சென்னை: சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது, இருவர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை என்று உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.

“பிற மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பிற மாநில தமிழ்ப் பள்ளிகளின் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 பரவலை முழுமையாக தடுத்த யோகிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

லக்னோ: கரோனா தொற்று பரவல் நெருக்கடியைக் கையாள சிறப்பான முயற்சிகளை எடுத்துவரும் உத்தரப் பிரதேச அரசை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உதவிய காவலர்கள்

புதுச்சேரி: சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்த மூதாட்டி ஒருவருக்கு உடை, உணவளித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலாய் லாமாவின் 85ஆவது பிறந்தநாள்: சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் திட்டம்

ஷிம்லா: தலாய் லாமாவின் 85ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஓராண்டு முழுவதும் நடத்த மத்திய திபேத் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாளை மறுமணம் - உருக்கமான பதிவு வெளியிட்ட வனிதா!

இயக்குநர் பீட்டர் பாலுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை, நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

ஆரோக்கியத்தை பாதுகாக்க புது இயக்கம் ஆரம்பிக்கும் சத்யராஜின் மகள்!

வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சத்யராஜின் மகள் திவ்யா புதிய இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கங்குலி - டிராவிட் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல, இப்போதும் முக்கியம்

பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல இப்போதும் மிக முக்கியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details