தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 23, 2020, 9:18 PM IST

மோதல்களுக்கு இடையே எல்லைகளை வலுப்படுத்தும் இந்திய அரசு!

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா படைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து அதிதிறன் கொண்ட ராணுவ வாகனங்களுடன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, பரபரப்பான எல்லைப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

'பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை ஊழல்' - ஸ்டாலின்

சென்னை: உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முழு கவச உடையை ஒருமுறை அல்ல பலமுறை பயன்படுத்தலாம்!

கோயம்புத்தூர்: கரோனா சிகிச்சைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (PPE) முழு கவச உடைகளுக்கு மாற்றாக பலமுறை துவைத்து பயன்படுத்தும் முழு கவச உடையை பிரபல தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை: 19 பேர் மீட்பு

சென்னை: ஊரடங்கு நேரத்தில் கடத்தப்பட்ட 19 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையை மீட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

’அஞ்சு வருசமா டேங்க் மட்டும்தான் இருக்கு... குடிக்கத் தண்ணீர் இல்ல’ : ஏமப்பூரில் அவலம்

2014 -15ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இனி கிலோமீட்டர் கணக்கில் நடக்கவேண்டாம் தங்கள் ஊருக்கே நீர்தேக்கத் தொட்டி வந்துவிட்டது என அக்கிராம மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் வருடங்கள் கடந்துவிட்டதே தவிர, ஒரு சின்ன குவளை நீர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்...

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோலைவிட அதிக விலைக்கு விற்பனையாகும் டீசல்!

டெல்லி : மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கூடுதல் வரி காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோலைவிட அதிக விலைக்கு டீசல் விரைவில் விற்பனையாக உள்ளது.

இதய நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பை கண்டறிய உதவும் செயலி!

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பை முன்கூட்டியே கண்டறிய செயலி உதவுகிறது. நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் நோய் அற்றவர்கள் ஆகிய இருவரின் குரல் மாதிரிகளை எடுத்து, செயலி மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வெற்றிக் கண்டுள்ளனர்.

நாயுடன் இணைந்து யோகா செய்யும் சமந்தா!

நடிகை சமந்தா தனது நாயுடன் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானர் வாசிம் ஜாஃபர்

உத்தரகாண்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்!

இந்திய சீன ராணுவங்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு உணர்வால் சாம்சங் நிறுவனம் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details