தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

By

Published : Nov 6, 2021, 9:11 AM IST

1. தொடரும் நீட் மரணங்கள்: மதிப்பெண் குறைவால் மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2. ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உதவியாளர் உள்பட 30 பேர் அதிரடி கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உதவியாளர் உட்பட 30 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

3. மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் இருவர் உயிரிழப்பு

தீபாவளியை முன்னிட்டு அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

4. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்..! - சசிகலா

சசிகலா இன்று நவ.05ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

5. சுவையான பாதுஷா செய்யலாமா..?

சுவீட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இன்று பாதுஷா எவ்வாறு சுவையாகவும், சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பது குறித்து இந்த காணொலியில் காண்போம்.
6. கோலி பிறந்தநாளுக்கு ஸ்காட்லாந்தை விருந்தாக்கிய இந்திய அணி!

டி20 உலகக்கோப்பையில் மிரட்டலான பந்துவீச்சால் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

7. இந்தியா 75 - ஒடிசா பழங்குடி மக்களின் நாயகன் லக்ஷ்மன் நாயக்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல பழங்குடி பிரிவினர் தீவிரத்துடன் பங்கேற்றனர். இதில் ஒரு சில முக்கியத் தலைவர்கள் ஆங்கிலேய அரசிடம் சிக்கி மரண தண்டனைக்கு ஆளாகி உயர் தியாகம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஷாஹீன் லக்ஷ்மன் நாயக்.

8. 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்து ஆதிவாசிகளுடனான பந்தத்தை நினைவுகூர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்

'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பார்த்த இயக்குநரும் முன்னாள் ஐஏஎஸ் அலுவலருமான ஞான ராஜசேகரன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதிவாசி பழங்குடிகளுடனான தனது பந்தம் குறித்து நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு தற்போது அதிகம்பேரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

9. அசால்ட் சேதுக்கு பிறந்தநாள்

நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. அழகே வியக்கும் 'விநோதய சித்தம்' ஷெரினா!

நீலாம்பரி ராகம் இவளோ?

ABOUT THE AUTHOR

...view details