தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

By

Published : Nov 3, 2021, 9:09 AM IST

1. யோகி vs பிரியங்கா: உ.பி., தேர்தலுக்கு சல்மான் குர்ஷித் சொல்லும் ஐடியா!

உத்தரப் பிரதேசத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் பிரியங்கா காந்தி நிற்கவேண்டும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

2. 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாகத் 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

3. சாலையில் கிடந்த பள்ளத்தால் இளைஞர் உயிரிழப்பு - நெடுஞ்சாலைத் துறையிடம் விளக்கம் கேட்ட போலீஸ்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி அரசுப் பேருந்தில் மோதி உயிரிழந்த சம்பவ தொடர்பாக விளக்கம் கேட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு காவல் துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

4. 2022ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2022ஆம் ஆண்டில் 6 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 23 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

5. தலை தீபாவளி உபசரிப்பு - சுடச்சுடத் தயாராகும் பலகாரங்கள்

தூத்துக்குடியில் தலை தீபாவளி உபசரிப்புக்காக வீடுகளில் சுடச்சுடத் தயாராகும் பலகாரம் விற்பனை குறித்த தொகுப்பு...

6. இன்றைய ராசிபலன்: உங்கள் ராசிக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

7. காவா குலாப்ஜாமுன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா..!

இந்த தீபாவளியன்று காவா குலாப்ஜாமுன் செய்து அசத்துங்கள்.

8. மறைக்கப்பட்ட... மறுக்கப்பட்ட பலகதைகள் இனி வரும் - பா.இரஞ்சித் நெகிழ்ச்சியான ட்வீட்!

சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

9. இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி - ரூ.100 கோடியைக் கடந்த 'டாக்டர்'

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தின் திரையரங்கு மொத்த வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

10. கரைபுரளும் அழகு வெள்ளத்தில் மின்னும் பொன் சிலை ரித்திகா சிங்!

பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டம் ரித்திகா சிங்!

ABOUT THE AUTHOR

...view details