தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - காலை 9 மணி செய்தின் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS @ 9 AM
TOP 10 NEWS @ 9 AM

By

Published : Aug 6, 2021, 9:03 AM IST

1.ஏறுமுகம் காணும் கரோனா: மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்தாலோசிக்கிறார்.

2,கொங்கு மண்டலத்தில் உதயமாகும் அறிவாலயம்

கோவை தெற்கு மாவட்டத்தில் 'கலைஞர் அறிவாலயம்' அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3.மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 5,000 குடும்பங்கள் பயன்பெரும் - அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 5,288 குடும்பத்தினர் பயன்பெறுவர் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

4.'கருணாநிதியின் கனவு திட்டம்... திமுக வளைந்து கொடுக்காது'

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டம் கருணாநிதியின் கனவுத் திட்டம். இதில் யாருடைய ஆதாயத்துக்காகவும் திமுக வளைந்து கொடுக்காது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

5.மக்களை தேடி மருத்துவம் - தொடங்கிவைத்த தா.மோ. அன்பரசன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

6.திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக அரசுக்கு மக்கள் நீங்கள் அரணாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

7.பிச்சைக்காரர்கள் அற்ற மாநிலமாக உருவாகிவரும் ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் கௌரவத்துடன் வாழும் வகையில் ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு தற்போது 60 பேர் வேலை பெற்றுள்ளனர்.

8.டோக்கியோ ஒலிம்பிக்: கிரேட் பிரிட்டனிடம் இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தி கிரேட் பிரிட்டனுடன் போட்டியிட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்விடைந்தது.

9.இந்தியாவின் முன்னாள் கோல்கீப்பர் பாபு நாராயணன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் கால்பந்து கோல்கீப்பர் எஸ்.எஸ். பாபு நாராயணன் நேற்றிரவு (ஆகஸ்ட் 5) காலமானார். அவருக்கு வயது 86.

10சத்தமில்லாமல் பிரபல சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடித்த செம்பருத்தி ஷபானா

நடிகை ஷபானா பிரபல சின்னத்திரை நடிகருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்கில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details