தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9 AM - 9 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்...

top news
செய்திச்சுருக்கம்

By

Published : Jul 19, 2021, 9:00 AM IST

1. இன்று வெளியாகிறது 12 ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல்

2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று (ஜூலை 19) காலை 11 மணிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

2. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

3. ஒன்றிய அரசுக்கு எதிராக மீனவர்கள் இன்று போராட்டம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஜூலை 19) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

4. சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்

சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு திருமுல்லைவாசல் சுற்றுவட்டார மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5. விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து

காசிமேடு மீனவர்களின் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் அதிர்ஷ்டவசமாக ஏழு பேர் உயிர் தப்பினர்.

6. தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம்

பயங்கரவாதிகள் தாக்குதலின் இடையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக்கின் உடல் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக்கத்தின் இடுகாட்டில் புதைக்கப்பட உள்ளது.

7. 4 நாள்களில் 1,000 தலிபான்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கடந்த 4 நாள்களில் 950க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

8. தரங்கம்பாடியில் மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே பொறையாறு அரசு மருத்துவமனை எதிரே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

9. 'அவர் படங்களை என்னால் இன்றுவரை பார்க்க முடியவில்லை’ - இர்ஃபான் மனைவி வேதனை!

இர்ஃபான் கான் உயிரிழந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவரது படங்களை இன்றளவும் தன்னால் பார்க்க முடியவில்லை என இர்ஃபான் கானின் மனைவி சுதாபா சிக்தர் தெரிவித்துள்ளார்.

10. 1983 நாயகன் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி!

1983 உலக கோப்பை வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி இன்று 66ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details