தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 am  top ten news  tamilnadu news  tamilnadu latest news  செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  top ten  ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்
செய்திச் சுருக்கம்

By

Published : Jul 3, 2021, 8:50 PM IST

1. தமிழ்நாட்டில் மலர்ந்த நான்கு தாமரைகள் பிரதமருடன் சந்திப்பு!

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் நால்வரும் இன்று (ஜூலை 3) பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோரை டெல்லி சந்தித்தனர்.

2. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

3. தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்லும் வகையில், முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

4. "பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"

வருகிற 8 ஆம் தேதியன்று இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பெட்ரோல் பங்க் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா தெரிவித்துள்ளார்.

5. சக்கர நாற்காலி இல்லாமல் கூடைப்பந்து விளையாட்டு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் தாக்கூர்!

பாஜக எம் பி பிரக்யா சிங் தாக்கூர் பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியுடனேயே வலம் வரும் நிலையில், உற்சாகமாக அவர் எழுந்து நின்று கூடைப்பந்து விளையாடும் காணொலி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

6. ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு திரும்பிவந்த இருவர் கைது

ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு, திரும்பிவந்த கேரளா, புதுக்கோட்டை இளைஞர்கள்சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7. கணவருடன் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி, தனது இரு குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்து தானும் தின்று உயிரிழந்தார்.

8. 'டான்' படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

'டான்' படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9. சினிமாவைக் கைப்பற்றி, கருத்து சுதந்திரத்தின் உயிர் பறிக்கும் ஒன்றிய அரசு - கமல்ஹாசன்

உச்சநீதிமன்றத்தால் அரசமைப்புக்கு முரணாது என குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை ஒளிப்பதிவு திருத்த மசோதா மூலம் ஒன்றிய அரசு கைப்பற்ற நினைக்கிறது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

10. திருமணத்தை நிறுத்திய நடிகை மெஹ்ரீன்

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தன்னுடைய திருமணம் நடைபெறாது என அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details