தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 9 AM

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 23, 2021, 9:22 AM IST

1. கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

2. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆவது நாள் கூட்டம்...!

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடரவுள்ளது.

3. ’நாளைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ - விஜய் மக்கள் இயக்கம்

நாளைய தமிழ்நாடு முதலமைச்சராகச் சேவையாற்ற உள்ள நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் குட்டி தெரிவித்துள்ளார்.

4. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. மதனின் இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை... பப்ஜிக்கு குட்-பை சொன்ன சிறுவர்கள்

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளம் தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் விதமாக வெளியிடப்பட்ட சைபர் கிரைம் போலீசாரின் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

6. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை சென்னையின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

7. சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானவர் உயிரிழப்பு!

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கிரெடிட் கார்டு வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் விசாரணைக்காக ஆஜரானவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

8. கரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கிய கனடா விஜய் ரசிகர்கள்

சென்னை: கரோனா தடுப்புப் பணிக்காக கனடா விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.

9. லாரியை விரட்டிய போலீஸ்: கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிய லாரி!

வேலூரில் ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினரிடம் இருந்து தப்பிய லாரியை, விரட்டிச் சென்றும் காவல் துறையினர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

10. சடங்கு காரியங்கள் செய்ய வரும் நபர்களால் அசுத்தமாகும் வைகை

சடங்கு சம்பிரதாயம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்ள வரும் நபர்களால் வைகை ஆறு தொடர்ந்து குப்பைக்கூளமாக மாற்றப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details