தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 4, 2021, 9:26 AM IST

1. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அன்பில் மகேஷ் ஆலோசனை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வியாளர்களுடன் காணொலி வாயிலாக இன்று (ஜூன் 4) ஆலோசனை நடத்துகிறார்.

2. மோசமான மொழி கன்னடம்... கொதித்தெழுந்த மக்களால் சரணடைந்த கூகுள்!

கூகுள் தேடலில் கன்னட மொழியை மோசமான மொழி எனக் காட்டியதற்காக, கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

3. பாஜக மேலிடத் தலைவர்கள் இன்று புதுச்சேரி வருகை

புதுச்சேரி: பாஜக மேலிடத் தலைவர்கள் இன்று புதுச்சேரி வருகைதருகின்றனர். இதில் புதுச்சேரி அரசியல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

4. முழு ஊரடங்கில் தளர்வுகள்? - முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 4) ஆலோசனை நடத்துகிறார்

5. தேச துரோகச் சட்டம் திரும்பப் பெறும் காலம் வந்துவிட்டதா?

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் தேச துரோக வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்துவருகின்றன.

6. இன்றுமுதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தேனி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து இன்றுமுதல் (ஜூன் 4) 120 நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது.

7. ராஜகோபாலனிடம் துருவி துருவி விசாரணை; வெளியான 'zoom' சேட்டைகள்

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் வகுப்புகளின் போது அவர் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்தது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

8. 'தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்' - இறையன்பு கடிதம்

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்படுத்தப்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது எனவும் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

9. 'நீட் உள்பட எந்தத் தேர்வையும் ஒன்றிய அரசு நடத்தாது என்ற உறுதியை பெற வேண்டும்'

ஒன்றிய அரசு நீட் உள்பட எந்தத் தேர்வையும் நடத்தாது என்ற உறுதிமொழியை மாநில அரசு பெற வேண்டும் என முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.

10. என் மின்னஞ்சலை ஹேக் செய்ய திட்டமிடுகிறார் - காவல் நிலையத்தை நாடும் நடிகை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகாரளித்த நடிகையின் மின்னஞ்சல், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள கணக்குகளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஹேக் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details