தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை c சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am

By

Published : May 1, 2021, 9:02 AM IST

1.குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து- 16 பேர் உயிரிழப்பு

நலன்புரி கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 நோயாளிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

2.வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.'ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை! உங்கள் வியர்வையினால் விளைந்தவை'

எளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை! அப்பழுக்கற்ற உங்கள் வியர்வையினால் விளைந்தவை எனக் கட்சித் தொண்டர்களுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

4.தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது - கனிமொழி

தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் இனிவரும் காலங்களில் நீர்த்துப்போகாமல் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

5.விடுதலைக் கருத்தியலை வித்திட்ட நாள் - திருமாவளவன் ‘மே தின’ வாழ்த்து

உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள். உலகை இயக்கும் உன்னத ஆற்றலான தொழிலாளர்களுக்கு எமது வாழத்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

7.அண்ணா பல்கலை.க்கு புதிய பதிவாளர் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக ராணி மரிய லியோனி வேதமுத்து மே 3ஆம் தேதி நியமிக்கப்படவுள்ளார்.

8.ஸ்புட்னிக் - வி தடுப்பூசி: இந்தியாவுக்கு கைகொடுக்கும் ரஷ்யா

நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், மூன்றாவதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வருகிறது.

9.’என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவிலிருந்து வந்தது’ - சூர்யா உருக்கம்

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவிலிருந்து வெளிப்பட்டது, அதன் மூலமாகத்தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது என கே.வி. ஆனந்த் மறைவு குறித்து சூர்யா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

10. வெற்றிக்கு வித்திட்ட ஹர்ப்ரீத்! பஞ்சாப் கிங்ஸ் அசத்தல்

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details