தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - காலை 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

By

Published : Apr 26, 2021, 9:06 AM IST

1.தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் - பாமக துண்டறிக்கை

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்க உள்ளோம் எனஅக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பாஸ்கரன் பேட்டியளித்துள்ளார்.

2.ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுமா? - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது.

3.மேற்கு வங்க தேர்தல் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

4.வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜை தொடக்கம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி எட்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

5.கார்களில் வந்து காவலர்களை அலறவைக்கும் 'இவர்கள்'!

வாகனங்களில் வருபவர்கள் தங்களுக்குத் தொற்று இருப்பதாகக் கூறி காவலர்களை அச்சுறுத்திச் செல்வது ஊரடங்கின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படுவதாக காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

6.பள்ளி மாணவி ஸ்கேட்டிங் போட்டியில் தேசியளவில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை!

சென்னையை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் மூன்று தங்கப் பதக்கத்தையும், தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.

7.புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு -அழகு நிலையங்கள், சலூன் கடைகள் திறக்கத் தடை !

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் ஆகியவை செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

8.காப்பீட்டு நிறுவன ஊழியரை கடத்திய வழக்கில் தம்பதி கைது!

கடன் வாங்கித் தர மறுத்த காப்பீட்டு நிறுவன ஊழியரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் சம்மந்தப்பட்ட தம்பதியை கோடம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

9.போபாலில் 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள்தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்!

கரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.25) முதல் செயல்படத் தொடங்கியது.

10.நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details