தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 am
காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

By

Published : Apr 4, 2021, 9:09 AM IST

இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை: கட்சிகளுக்கு கடிவாளம் போட்ட ஆணையம்!

இன்று மாலையுடன் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

'தேவையற்ற ரெய்டுகளைத் தவிர்க்க வேண்டும்' - அதிமுக கடிதம்

அரசியல் ரீதியாக அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது வருமானவரிச் சோதனைகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.

'திமுகவினருக்காகவே நில அபகரிப்புச் சட்டம் கொண்டுவந்தார் ஜெ.!'

திமுகவினரின் ரவுடிசம் ரத்தத்தில் ஊறியது, அதனை மாற்ற முடியாது. திமுகவினரின் செயலைத் தடுப்பதற்காக ஜெயலலிதா நில அபகரிப்புச் சட்டத்தை கொண்டுவந்தார் என ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.

'ஊழலின் மையப்புள்ளி கோபாலபுரம்!'

ஊழலின் மையப்புள்ளி கோபாலபுரம் என ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சசிகலா தரிசனம்

சங்கர மடத்தில் மகா பெரியவர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சசிகலா தரிசனம்செய்தார்.

கைப்பற்றிய பொருள்களைக் கணக்கில் காட்டாத காவலர்கள்

திருவல்லிக்கேணி விடுதியில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்களைக் கணக்கில் காட்டாமல் மறைத்த ஆய்வாளர் உள்பட நான்கு காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இலங்கைக்கு 400 கிலோ மஞ்சள் கடத்த முயற்சியா?

ராமநாதபுரம் கடற்கரை அருகே, கரை ஒதுங்கிய 400 கிலோ மஞ்சள் இலங்கைக்கு கடத்த முயற்சியா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சுங்கத் துறையின் 'நீலக் கழுகு' சோதனை: ரூ.50 லட்சம் பறிமுதல்!

தேர்தலையொட்டி நடத்தப்பட்ட 'நீலக் கழுகு' நடவடிக்கையில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாய், 36 கிலோ வெள்ளி ஆகியவற்றைச் சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

சென்னையில் 2 கோடி ரூபாய் மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது

லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி இரண்டு கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடிசெய்த டெல்லியைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

'மாஸ்டர்' இந்தி ரீமேக்கில் சல்மான் கான்?

'மாஸ்டர்' பட இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details