தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - latest news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 am
காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

By

Published : Apr 3, 2021, 9:07 AM IST

திமுக சுனாமியைப் போன்று ஆபத்தானது - டிடிவி தினகரன்

மீனவர்களின் 28 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து பரதர் என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையின்போது உறுதியளித்துள்ளார்.

7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும், வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை 7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

'மோடி பிரதமர் பதவிக்கே லாயக்கு இல்லாதவர்' - ஸ்டாலின்

"பொள்ளாச்சி சம்பவத்தை யார் விட்டாலும் நான் விடமாட்டேன். பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றி தெரியாத மோடி பிரதமர் பதவிக்கே லாயக்கு இல்லாதவர்" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆ. ராசாவால் திமுகவிற்கு இம்முறை வைப்புத்தொகைக்கூட கிடைக்காது - விந்தியா

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது அதிமுக பரப்புரையில் நடிகை விந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

'சோதனை மேல் சோதனை... ஆனாலும் சாதனை' - பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி

என்னைப்போல எந்த ஒரு முதலமைச்சரும் சோதனையை அனுபவித்தது இல்லை. அந்த அளவுக்குச் சோதனைகளை அனுபவித்தேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் தலைமை அலுவலர்கள் ஆலோசனை!

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையருடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, தலைமைச் செயலர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

வருமானவரி சோதனையை எங்கள் மீது திணிப்பதா - திமுகவைச் சாடிய ஜெயக்குமார்!

வருமானவரித் துறை சோதனையை எங்கள் மீது திசைத்திருப்பி, திமுக அரசியல் ஆதாயம் தேடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சாலையின் நடுவே பற்றி எரிந்த கார்; நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த ஓட்டுநர்!

சாத்தூர் அருகே சாலையின் நடுவே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

இனிமையான நினைவுகளைத் தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி - கேரி கிறிஸ்டன்

இனிமையான நினைவுகளை அளித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி என முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநருடன் கைக்கோத்த விஷால்... பக்கபலமான யுவன் சங்கர் ராஜா!

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் '#விஷால் 31' புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details