தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ....

Top 10 News @ 9 AM
Top 10 News @ 9 AM

By

Published : Mar 18, 2021, 9:01 AM IST

விழுப்புரத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச்.18) உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதிமுக, திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

திருப்பூர்: மதிமுக, திமுக நிர்வாகிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் 2,340 கோடி ஊழல்: மின்துறை பொறியாளர்கள் அமைப்பு புகார்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 2,340 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது.

திரைப்பட பாணியில் தங்க மாத்திரைகள் கடத்தி வந்த நபர் கைது

சென்னை: திரைப்பட பாணியில் துபாயிலிருந்து வயிற்றுக்குள் வைத்து தங்க மாத்திரைகளைக் கடத்தி வந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க மாத்திரைகளுடன் மின் சாதனப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது குறித்து நான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக பேசிவருவதாகக் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

இந்து மகா சபை இளைஞரணி தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

கோவை: துடியலூர் அருகே இந்து மகா சபா மாநில இளைஞர் அணித்தலைவரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9,10,11ஆம் வகுப்பு பொதுத் தேர்வா? மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பால் குழப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 9,10,11ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

’அழகான எந்தக் காரியத்தையும் அவர் செய்ததில்லை’ - முதலமைச்சரை விமர்சித்த ஆ.ராசா

முதலமைச்சர் பழனிசாமி அழகான எந்தக் காரியத்தையும் செய்ததில்லை என்பதால் அவர் திமுகவை விமர்சிப்பதில் ஆச்சரியமில்லை என, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தனியார் உணவுப்பொருள் நிறுவனத்தின் 3 கோடி மதிப்பிலான நகைகள், 9 வாகனங்கள் பறிமுதல்

சென்னை : கடந்த 11ஆம் தேதி தனியார் உணவுப்பொருள் வர்த்தக நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் நகைகள், 12 கோடி ரூபாய் மதிப்பிலான 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது மாடில பேய் இருக்கா... 700 ஆண்டுகளாகத் தீராத மர்மம்!

அமானுஷ்யக் கதைகளுக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் இருக்கிறது உர்சார் கிராமம்.

ABOUT THE AUTHOR

...view details