தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

By

Published : Feb 6, 2021, 9:02 AM IST

Published : Feb 6, 2021, 9:02 AM IST

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்

1 வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயாரான அரசு?

வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயாராகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...

சென்னை: 2020-21ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவித் திட்டத்திற்கு 726 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்து, ஏழு பயனாளிகளுக்குத் தங்க நாணயம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்ததோடு, மேலும் பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் தொடங்கிவைத்துள்ளார்.

3 திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் - மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

4 நெல்லையில் மண்டலப் புற்றுநோய் மையம்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.

5 'சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிடுவோர் மீது நடவடிக்கை தேவை'

புதுச்சேரி: மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டும்வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் இடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி பாஜக வழக்கறிஞர் அணித் தலைவர் கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.

6 எந்த மதமும் தான் பெரியது என்று கூறவில்லை - மோகன் சி லாசரஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து

தங்கள் மதம் பெரியது எனக் கூறி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது சம்பந்தப்பட்ட மதத்தின் நோக்கமோ, மத நம்பிக்கைகளின் நோக்கமோ அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

7 பணி முடிந்து ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு அமோக வரவேற்பு

ராமநாதபுரம்: கமுதி அருகே ராணுவப் பணியை நிறைவுசெய்து ஊர் திரும்பிய ராணுவ வீரரை 'சேது சீமை பட்டாளம்' என்ற ராணுவ வீரர்கள் குழு வரவேற்று உற்சாக வரவேற்பு அளித்தது.

8 சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வு

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

9 மாஸ்டர்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!

சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரிமம் பெறாத பாடல்களைப் பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மாஸ்டர் படத்தின் நிறுவனம் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10 100ஆவது போட்டியில் சதமடித்த 9ஆவது வீரர் - ரூட்டின் சாதனை பட்டியல்

தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் இங்கிலாந்து கேப்டனும், பேட்ஸ்மேனுமான ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல காரணமாக இருந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details