தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - ETV Bharat Tamil News

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news
Top 10 news

By

Published : Jan 31, 2021, 9:04 AM IST

1. டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு; ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் ஹைதரபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2. 'தமிழர் விரோத, தேச விரோதப்போக்கை கையாண்டுவரும் திமுக' - ஜெ.பி. நட்டா தாக்கு

திமுக தமிழர் விரோத, தேச விரோதப்போக்கை கையாண்டுவருவதாக குற்றஞ்சாட்டிய ஜெ.பி. நட்டா, மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்து பெற வேண்டும் என்றார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அவ்வாறே செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3. ராகுல்காந்திக்கு 'தமில்' வகுப்பெடுத்த நடிகை குஷ்பு - மதுரை பாஜக பிரச்சாரத்தில் ருசிகரம்!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் தமிழ்மொழி உச்சரிப்பைக் கேலி செய்து, நடிகையும், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, 'தமிலை' முறையாகக் கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.

4. நாகலாபுரம் சுகந்தி மீது புகாரளித்த டிக்டாக் புகழ் திவ்யா

தன் காதலன் கார்த்திக்கை அபகரித்ததாக நாகலாபுரம் சுகந்தி என்பவர் மீது கார்த்திக்கின் காதலி டிக்டாக் புகழ் திவ்யா காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

5. திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!

விருதுநகரில் திருமணமாகி ஒன்றரை மாதமான புது மாப்பிள்ளை கடன் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

6. புதிய ரத்தம் பாய்ச்சும் பிராந்திய மலையாள ஓடிடித் தளங்கள்!

சினிமா துறையில் புதிய ரத்தம் பாய்ச்சும் பிராந்திய மலையாள ஓடிடித் தளங்கள் குறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் கேரள செய்தி ஆசிரியர் கே. பிரவீன் குமார்.

7. கேரளா தேர்தல் 2021: சிறுபான்மை கட்சிகள் இடையே முரண்பாடு, காங்கிரஸ் வெல்வது பெரும்பாடு!

அண்டை மாநிலமான கேரளத்தில் அடுத்த மூன்று மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சிறுபான்மை கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு, காங்கிரஸ் வெற்றியை பாதிக்குமா என்பது குறித்து விவரிக்கிறார் வர்கீஸ் பி ஆப்ரஹாம்.

8. நேபாளம்: தீராத நெருக்கடியில் உள்ள நாடு

நேபாளம் அரசியல் உறுதியற்ற தன்மையில், குறிப்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டாட்சி, ஜனநாயக குடியரசாக தோன்றியதிலிருந்து ஒரு தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த உறுதியற்ற தன்மை அதன் சிதறிய அரசியல் நிலப்பரப்பு, உடையக்கூடிய அரசியலமைப்பு மற்றும் அதிகார வேட்கை அரசியல் தலைமை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.

9. ஐஎஸ்எல்: மும்பை சிட்டிக்கு 'ஷாக்' கொடுத்த நார்த் ஈஸ்ட் !

ஐஎஸ்எல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது.

10. வன பாதுகாவலனின் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்?

யானை - மனித மோதல் பிரச்னை இன்று உச்சம் தொட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோவை வனக்கோட்டத்தில் 153 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உயிரிழப்பைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

ABOUT THE AUTHOR

...view details