தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

செய்திச் சுருக்கம்
top 10 news@ 9 am

By

Published : Jan 13, 2021, 9:37 AM IST

'அமித் ஷா கிட்ட சொல்லி மதக்கலவரம் பண்ணிடுவேன்': சிக்கன் ரைஸால் சிக்கலில் மாட்டிய பாஜக நிர்வாகி

சென்னை: சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல், அமித் ஷாவின் உதவியாளருக்கு போன் செய்து மதக்கலவரம் செய்து விடுவதாக கடை ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது புகாரளிக்கப்பட்டது.

'வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது வரவேற்கத்தக்கது' - பி.ஆர். பாண்டியன்

திருவாரூர்: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி வீடுகளை இடிக்க எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பூந்தமல்லி அகரமேல் பகுதியில் அனுமதியின்றி குடியிருப்புகளை இடிக்க வந்த அலுவலர்களைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக அடிமையாகி விட்டது என விஷமப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவரவே அதிமுக அரசு மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருப்பதாக சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

வெளியானது 'மாஸ்டர்' - திரையரங்குகளில் திருவிழா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

உள்ளம் துள்ளும் சேலம் வெல்லம்! உச்சத்தில் விற்பனை!

சேலம்: சேலத்தின் சிறப்புகளுள் ஒன்றான கலப்படமற்ற வெல்லத் தயாரிப்போடு விற்பனையும் விறுவிறுப்படைந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு நடக்கும் டன் கணக்கிலான வெல்ல விற்பனை குறித்த ஒரு செய்தித்தொகுப்பு.

இண்டிகோ விமான நிலைய மேலாளர் சுட்டுக் கொலை

பாட்னா: இண்டிகோவில் பணியாற்றிய விமான நிலைய மேலாளரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிரிழந்தார்.

தளபதி விஜய்யின் பொங்கல் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை!

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் மீது அனைத்து தரப்பின் எதிர்பார்ப்பு உள்ளது.

சயீத் முஷ்டாக் அலி : தமிழ்நாடு அபார வெற்றி!

சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டதில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒடிசா மண் சிகிச்சை!

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஆயுர்வேத மருத்துவர் குரு சரண் ஜெனா மண், நீர், காற்று, சூரிய கதிர் ஆகியவற்றை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details