தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ஈடிவி பாரத்தின் செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்காலை 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jan 7, 2021, 9:25 AM IST

ட்ரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தனிப்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன.

'விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை': கமல்ஹாசன்

வேலூர்: விண்வெளி முதல் விவசாயம் வரை, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘சென்னையில் இதுவரை 90,794 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளன’- மாநகராட்சி நிர்வாகம்!

சென்னை: கடந்தாண்டு மே மாதம் முதல் நேற்று (ஜன.7) வரை 90 ஆயிரத்து 794 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆன்லைன் கடன் மோசடி: சிம் கார்டுகள் சப்ளை செய்த நான்கு பேர் கைது!

சென்னை: ஆன்லைன் கடன் செயலிகளை செயல்படுத்த ஆயிரத்து 100 சிம் கார்டுகளை வாங்கிகொடுத்த நிறுவன உரிமையாளர், தனியார் தொலைதொடர்பு நிறுவன ஊழியர் உள்ளிட்ட நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண்ணிடம் செல்போன் பறிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் கைது

சென்னை: திருவான்மியூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து செல்போன் பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்- சுற்றுலாப் பயணிகள் அவதி!

கடந்த நான்கு நாள்களாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் வெளியே வர முடியாமல் அவதியுறுகின்றனர்.

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு - ஆதரவாளர்கள் கலைந்து செல்ல ட்ரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களை வீட்டுக்குச் செல்லும் படி ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய டெக் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்த வார்பர்க் பிங்கஸ்!

இந்தியாவில் தகவல் சாதனத் தயாரிப்பில் பெரும் பங்காற்றிவரும் போட் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த வார்பர்க் பிங்கஸ் நிறுவனம், இந்திய மதிப்பில் சுமார் 731 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

3ஆவது டெஸ்ட்: மழைக் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழைக்காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல்: முதல் வெற்றிக்கு போராடும் ஒடிசா எஃப்சி!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details