தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - ஒன்பது மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news at 9 am
Top 10 news at 9 am

By

Published : Jul 4, 2020, 9:00 AM IST

'குடும்ப ஊடகங்கள் மூலம் மலிவான அரசியல் பரப்புரை'- திமுகவை சாடும் ராஜேந்திர பாலாஜி

எந்தெந்த விவகாரங்களில் அரசியல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுத்து, தங்களின் குடும்ப ஊடகங்கள் வாயிலாக திமுக மலிவான அரசியலில் ஈடுபடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அறந்தாங்கி சிறுமியின் உறவினர் டவரில் ஏறி தற்கொலை முயற்சி!

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி அச்சிறுமியின் உறவினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் மகாராஜன் ஆஜரான தகவல் பொய்யானது - ஐஜி சங்கர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு காவலர் மகாராஜன் ஆஜரானதாக வந்த தகவல் பொய்யானது என ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

பசியால் வாடும் மக்களுக்கு உதவும் லவ் பண்டல்!

சென்னை: பசியால் வாடும் மக்களுக்கு சென்னையை சேர்ந்த தம்பதியினர் லவ் பண்டல் ( love bundle ) என்ற பெயரில் உணவுப் பொருள்களை வழங்கி, சமூக வலைதளங்களில் பலருக்கும் சேலஞ்ச் செய்து வரும் நிகழ்வு சமூக ஆர்வலர்களின் பார்வையில் புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது.

அரசின் நடவடிக்கையால் தொற்று விரைவில் குறையும் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அரசின் தொடர் நடவடிக்கையால் விரைவில் தொற்று பரவல் குறையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீனு. மீனு.. கரோனா முடக்கத்தால் மீன்வியாபாரி ஆன மலையாள நடிகர்!

கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்தான நிலையில், மலையாள நடிகரான சுதீஷ் அன்சேரி மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய இளம்பெண் சடலம்!

கரூர்: மாயனூர் கதவனை அருகே காவிரி ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனாவை விட்டு மெஸ்ஸி போகக்கூடாது - ஜிடேன்

பார்சிலோனா அணியில்தான் மெஸ்ஸி இருக்க வேண்டும் என ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் தெரிவித்துள்ளார்.

யாசின் மாலிக் மீது இரு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) தலைவர் யாசின் மாலிக் மீது பாரமுல்லா நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மாலிக் தற்போது திகாரில் வேறு வழக்கின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தெலங்கானா அமைச்சர்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது மெஹ்மூத் அலி, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details