தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Feb 28, 2021, 6:59 PM IST

ஈடிவி 7 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி 7 மணி செய்திச் சுருக்கம்

1.மீண்டும் விதிகளை மீறி இந்தியில் கடிதம் அனுப்பும் அமைச்சகங்கள்- எம்பி கண்டனம்

சட்டவிதிகளை மீறி மத்திய கலாச்சார அமைச்சகம் எம்பி சு. வெங்கடேசனுக்கு இந்தியில் கடிதம் அனுப்பியுள்ளதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2.57% குறைந்த ரயில் விபத்துகள்

ரயில் விபத்து மரணங்கள் கடந்தாண்டு 57 விழுக்காடு குறைந்துள்ளதாக ரயில்வே காவலர்கள் தெரிவித்தனர்

3.திமுக தொகுதி பங்கீடு: மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த வைகோ

திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

4.தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக

தமிழ்நாட்டில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் படங்கள் அச்சிடப்பட்ட 5 கிலோ அரிசி பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5.மோடியிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி- ராகுல் காந்தி

திருநெல்வேலி: ஊழல்வாதியாக இருப்பதால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

6.கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த்? - உழைப்பும் பின்னணியும்!

மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மதில் சுவர்களில் விளம்பரப்படுத்தி இருக்கிறார். மேலும் தேங்காய் பட்டணத்தில் மீனவர்களுடன் கடலுக்குள் செல்ல இருக்கும் ராகுல் காந்திக்கு அதிநவீன படகு ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றரை கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்டு வரும் இந்த படகின் முழு செலவையும் விஜய் வசந்த்-தான் செய்து வருகிறார்.

7.இருசக்கர வாகனம் மீது கார் மோதல் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

பெரம்பலூர் : வேப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8.திடீரென ரத்து செய்யப்பட்ட ஆவின் தேர்வு!

நாமக்கல்: சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறியாமல் தேர்வு மையத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

9.கராத்தே மாஸ்டர் இயக்கும் ”தோப்புக்கரணம்”!

பிரபல கராத்தே மாஸ்டர் பாஸ்கர் சீனுவாசன் "தோப்புக்கரணம்" எனும் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

10.விஷ்ணு விஷாலின் ‘காடன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘காடன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details