தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7pm - Toh headlines

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @7 PTop 10 News @7 PMM
Top 10 News @7 PM

By

Published : Feb 10, 2021, 7:05 PM IST

  • வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தது தவறா... பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசின் முடிவுக்கு ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

  • பருப்பு வகைகளை தவிர்த்துவரும் இந்திய மக்கள்!

இந்தியாவில் 2018ஆம் ஆண்டிலிருந்து பருப்பு வகைகளின் நுகர்வு மக்களிடம் வெகுவாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • புகாரை படிக்க தெரியாத ஸ்டாலின், குறைகளை எப்படி தீர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி

வாங்கும் புகாரை கூட சரியாக படிக்க தெரியாத மு.க. ஸ்டாலின் எப்படி மக்களின் குறைகளை தீர்ப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

  • ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் அதிமுக அரசுக்கு இருக்கிறது- கனிமொழி எம்பி

கைத்தறிக்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசிடம் பேசினால் ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் அதிமுக அரசு இருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

  • ஒடிசாவில் கடை அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு!

பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக கடை அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

  • 19 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்!

புதன்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தை 19.06 புள்ளிகள் வீழ்ந்து 51,309.39 புள்ளிகள் என வர்த்தகமானது.

  • யானை வழித்தடத்தில் செங்கல் சூளை! - உடனே அகற்ற உத்தரவு!

யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி உடனே அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • புரோட்டா குருமாவுக்காக தகராறு: கூலி தொழிலாளி அடித்துக் கொலை!

புரோட்டா பார்சலுக்கு குருமா கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முன்னேறிய ரூட், பின்னடைவைச் சந்தித்த கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • ஏமன் உள்நாட்டுப் போர்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இரண்டு பெரிய வெடிவிபத்துகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details