தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - சென்னை மெட்ரோ ரயில்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7AM
Top 10 news @ 7AM

By

Published : Nov 22, 2020, 8:42 AM IST

Updated : Nov 22, 2020, 9:13 AM IST

எம்.பி.க்கள் வருவது சந்தேகம்... நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா?

நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி கேள்வி

நாகை: என்னை கைது செய்த அதிமுக அரசு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கைது செய்யாதது ஏன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னைப்பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை: ஸ்டாலின் கொதிப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பராமரிப்புப் பணி காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்...!

அவசர தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக இன்று (22 நவம்பர்) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா! அடுத்த 6 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து இவ்வளவு மாறுமா?

சென்னை: இன்னும் ஆறு ஆண்டுகளில் மெட்ரோ ரயிலில், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் அமையவுள்ளது. இதற்காக 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஅடிக்கல் நாட்டினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் விராட் கோலியின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தயாராகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பரபரப்பான சேஸிங்...திருடனை மடக்கி பிடித்த காவலர்கள்!

திருச்சி: மணப்பாறை அருகே லாரியை திருடிய நபரை 60 கிமீ சேஸிங் செய்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாம்பரம் மக்களை அச்சுறுத்தும் கொள்ளை சம்பவங்கள்!

சென்னை: தாம்பரத்தில் ஒரே பகுதியில் இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 78 மாடுகள் உயிரிழப்பு...!

ஜெய்ப்பூர்: அரசு உதவிபெறும் கால்நடை காப்பகத்தில் ஒரே நாளில் 78 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் உத்வேகம் ரூமா தேவி!

திறமையும், உறுதியும் ஆகச் சிறந்த இணை. நாட்டின் முதல் குடிமகனால் அங்கீகரிக்கப்பட்ட சாதனை பெண்மணி ரூமா தேவியின் வாழ்க்கை இதனை உணர்த்துகிறது.

Last Updated : Nov 22, 2020, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details