தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 7PM
Top 10 news @ 7PM

By

Published : Jul 5, 2020, 7:01 PM IST

நாட்டை சுற்றிய விஷ நாகம் நிர்மலா சீதாராமன் - திரிணாமுல் தலைவர் காட்டம்!

கொல்கத்தா : கால நாகினி கக்கும் விஷத்தைப் போல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தவறான பொருளாதார பார்வை நாட்டு மக்களைக் கொல்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

தீவிர இடதுசாரிகளை வீழ்த்துவோம் - ட்ரம்ப்

வாஷிங்டன் : தீவிர இடதுசாரிகள், போராட்டக்காரர்கள், கொள்ளையர்கள் ஆகியோரை வீழ்த்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 24 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை!

டெல்லி : நாடு முழுவதும் நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 24,850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மனிதக் கழிவுகள் மூலம் கரோனா பரவுகிறதா ?

சென்னை: மனிதக் கழிவுகள் மூலம் கரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் விவரங்களை வெளியிடுவது தவறு!

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது சட்டத்துக்கு எதிரானது என்றும் இனிவரும் காலங்களில் அதுபோன்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

'நீதிபதி பி.என். பிரகாஷ் பணியிட மாற்றம்... அச்சுறுத்தும் அதிமுகவின் அரசியல்' - திருமாவளவன்

சென்னை: காவல் துறையினரின் கொடூரத்தைச் சகித்துக்கொள்ளாத நீதிபதி பி.என். பிரகாஷின் பணியிடம் மாற்றப்பட்டிருப்பது அச்சுறுத்தும் அரசியல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஹாங் காங்: ஜனநாயக சார்பு புத்தகங்களுக்கு தடை

ஹாங் காங்: ஜனநாயக சார்பு புத்தகங்களை நூலகங்களில் வாடகைக்கு கொடுக்க கேரி லேம் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஒன் பிளஸ் 8/ 8 ப்ரோ சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ கைப்பேசிகள் சில நிமிடங்களில் இணையச் சந்தையில் விற்றுத் தீர்ந்துள்ளன. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலையைக் காணலாம்.

'மறதி ஒரு தேசிய வியாதி' - நடிகர் பிரசன்னா வேதனை

சென்னை: சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேகுகள் மாறும் ஆனால், மாற வேண்டியது எதுவும் மாறாது என நடிகர் பிரசன்னா வேதனை தெரிவித்துள்ளார்.

கார் மோதி முதியவர் உயிரிழப்பு - கிரிக்கெட் வீரர் கைது

கொழும்பு : கார் மோதி முதியவர் உயிரிழந்தது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details