தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - chennai district news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jan 24, 2021, 7:07 AM IST

1 லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

உடல்நிலை மோசமடைந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ்வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

2 பட்ஜெட் 2021: வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம்: வாராக்கடன் வங்கி அமைப்பு?

2021 பட்ஜெட்டில் வங்கிகளின் வாராக்கடனை சமாளிக்க ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம் அளிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்கின்றனர்.

3 நேதாஜியின் இந்தியாவை உலகம் காண்கிறது- நரேந்திர மோடி

இந்திய தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கற்பனை செய்த இந்தியாவை உலகம் பார்க்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

4 வங்கி பணத்தை மோடி அரசு பெருநிறுவனங்களுக்கு வழங்குகிறது- ராகுல்காந்தி

இந்திய வங்கிகளில் உள்ள பணத்தை எல்லாம் மத்திய அரசு பெரும் முதலாளிகளுக்கு வழங்கி வழங்குகிறது, அவர்கள் திருப்பிச் செலுத்தாத சூழ்நிலையில் அதனை தள்ளுபடி செய்து மீண்டும் மீண்டும் வழங்குகிறது என திருப்பூரில் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

5 இந்தியா-சீனா இன்று 9ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை!

இந்தியா-சீனா இடையே இன்று (ஜன.24) 9ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடக்கிறது.

6 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலைக்கு வாங்க சதி- திமுக மீது அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலைக்கு வாங்க சதி செய்வதாக திமுக மீது அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும்- சையது ஷாநவாஸ் ஹூசைன்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலர்ந்துள்ளது, இனி மேற்கு வங்கத்திலும் மலரும், அன்று தாய், மண், மக்கள் எனப் பேசிக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி இன்று துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிப்பொருள்கள் எனப் பேசுகிறார் என்று ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.

8 குஜராத் மாநிலத்துக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது டெஸ்லா இந்தியா!

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால்பதிக்க தயாரான நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க தூது அனுப்பினர். இச்சூழலில் தனது முதல் தயாரிப்பு ஆலையை குஜராத் மாநிலத்தில் நிறுவ டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

9 கனவை நனவாக்கிய சோனாக்ஷி சின்ஹா...!

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ​​மும்பை பாந்த்ராவில் 4 பிஹெச்கே வீட்டை தனது சொந்த பணத்தில் வாங்கியுள்ளார்.

10 ஜன.27இல் சென்னை வரும் இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details