தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - ம்னி பஸ் சங்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

By

Published : Jul 6, 2020, 7:20 AM IST

டெல்லியில் 'கோவிட் -19' போர் அறை!

டெல்லி: கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சூழ்நிலையைத் திறம்பட கையாள்வதற்காகவும் டெல்லியில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய 'கோவிட் -19' போர் அறை அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - மாவட்ட ஆட்சியர் மட்டும் மரியாதை செலுத்த அரசு அறிவுறுத்தல்

சென்னை: இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் மட்டும் மரியாதை செலுத்துவார் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

'சாலையில் இயங்காத பேருந்துகளுக்கு வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம்' - ஆம்னி பஸ் சங்கம்!

சென்னை: சாலையில் இயங்காத பேருந்துகளுக்குச் சாலை வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம் என‌ ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்களைத் தொடர்ந்து குழப்பத்திற்கு உள்ளாக்கும் பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராத 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என (Absent) பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

'சென்னை முழுவதும் இன்று 558 மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டம்' - சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னை முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று (ஜூலை 6) மட்டும் 558 மருத்துவ முகாம்கள் நடத்தப்போவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சீக்கிய படுகொலை குற்றவாளி மகேந்தர் யாதவ் கரோனாவால் காலமானார்!

டெல்லி: 1984 சீக்கிய படுகொலை வழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மகேந்தர் யாதவ் கரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இன்று (ஜூலை 5) காலமானார்.

காதலியை கரம்பிடித்த ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான யோகி தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரீமியர் லீக்: பார்ன்மவுத் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி!

இங்கிலாந்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரின் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-2 என்ற கோல் கணக்கில், பார்ன்மவுத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

ஊழல் வழக்குகளின் மைய புள்ளியாக திகழும் இஸ்ரேல் நாட்டு பிரதமரின் மகன்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈடுபட்ட அனைத்து ஊழல்களுக்கும் காரணம் அவரின் மகன் யேர் தான் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

உமீட் திட்டம்: வேலையற்ற இளைஞர்களின் வாழ்வை வளமாக்கும் பால் உற்பத்தி

ஒரு லிட்டர் பால் 28 ரூபாய்க்கு விற்பனை செய்வதிலிருந்து 572.32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. உமீட் திட்டத்தின் கீழ், பெண்கள் உள்பட புல்வாமாவில் உள்ள இளைஞர்கள் பால் சங்கங்களை நிறுவி பயனடைந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details