தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top 10 news 7 pm
top 10 news 7 pm

By

Published : Oct 9, 2021, 7:12 PM IST

1.முதலமைச்சர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பிற்காக செல்லும் கன்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

2.3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

குஜராத்தில் ரூ.21ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியினரின் வீட்டில் டெல்லி என்ஐஏ தொடர்ந்து பத்து மணிநேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

3.தேர்தல் தேதியை திரும்பப்பெற வலியுறுத்தி துணை நிலை ஆளுநரிடம் மனு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதியை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடன் மனு அளித்தனர்.

4.யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சுற்றறிக்கையை விமர்சித்த ஜோதிமணி எம்பி

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை விமர்சித்து கரூர் எம்பி ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.

5.அல்சைமர் - கரோனா நோய்களை இணைக்கும் மரபணு: மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

அல்சைமர், கடும் கரோனா பாதிப்பு ஆகிய இரண்டு நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடிய வைரஸ் எதிர்ப்பு மரபணு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

6.நான் பட்டக் கஷ்டங்களை என் மகன் சந்திக்கக் கூடாது - வைகோ

எனது மகன் அரசியலுக்கு வருவதை துளியளவும் விரும்பவில்லை, நான் பட்டக் கஷ்டங்களை என் மகன் சந்திக்கக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.

7.சமந்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்

நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து தவறாக பேசுபவர்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நிலையில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

8.நீட் தேர்வு விலக்கு பொய் வாக்குறுதி அல்ல- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு விலக்கை புறம் தள்ளியதுபோல இந்த ஆட்சியில் நடைபெற வாய்ப்பே இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

9.புக் மை ஷோவில் முதலிடம் பிடித்த ’வலிமை’!

வெளிவரவிருக்கும் திரைப்படங்களைக் காண விரும்புபவர்களின் பட்டியலில் (புக் மை ஷோ), சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைப் பெற்று வலிமை திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

10.மருத்துவ ஊசிகள் ஏற்றுமதிக்கு மூன்று மாதம் தடை

அடுத்த மூன்று மாதங்களுக்கு மருத்துவ ஊசிகள் தடை செய்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details