6, 'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'
பென்னாகரம் தொகுதி அதிக பரப்பளவு கொண்டது என்பதால் இங்கு மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி வேண்டுகோள்வைத்தார்.
7, தந்தை பெரியார் பிறந்த நாள், இனி சமூக நீதி நாள்: முதலமைச்சர் அறிவிப்புக்கு வைகோ பாராட்டு
மாபெரும் சமூக நீதிப் போராளியான தந்தை பெரியாரின் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக அறிவித்து, தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி காக்கும் உறுதிமொழி எடுப்பதற்கு ஆவன செய்துள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
8, குடிபோதையில் தகராறு - இளைஞரின் காதை கடித்து துப்பிய கும்பல்
சென்னையில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டிலை கீழே தள்ளிவிட்டதை தட்டிக்கேட்ட இளைஞரின் காதை கடித்து துப்பிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
9, சென்னையில் நிலத்திற்குள் மின்சார வயர்கள் புதைக்க நடவடிக்கை
சென்னையில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலத்திற்குள் மின்சார வயர்களைப் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
10, கொடைக்கானல் படகு சவாரி: மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்த சுற்றுலாப் பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இடங்களாக மோயர் பாயின்ட், குணா குகை, தூண்பாறை, பைன்மரக் காடுகள் எனப் பல்வேறு சுற்றுலா இடங்களை பயணிகள் கண்டுகளிப்பார்கள். லேசான சாரல் மழையில் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் செய்து, தங்கள் பயணத்தை இனிதே நிறைவுசெய்வார்கள்.