தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM

By

Published : Jul 23, 2021, 7:10 PM IST

1.'சொந்தத் தேவைக்குப் பேருந்தில் சென்றால் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்'

சொந்தத் தேவைக்குப் பேருந்தில் செல்லும்போது கண்டிப்பாக பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.


2.திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல தொங்கு பாலம் - எ.வ. வேலு

விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல ரூ.37 கோடி மதிப்பில் தொங்கு பாலம் அமைக்கப்படும் எனப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.


3.கூடலூரில் தொடர் மழை: மக்கள் அவதி

கூடலூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


4.ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு விவகாரத்தில் காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் என முன்னாள் அதிமுக நிர்வாகி உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


5.சிறுவன் மீது ஏறிய டிராக்டர்: அதிர்ச்சி காணொலி

சிறுவன் மீது டிராக்டர் ஏறிய பிறகே நின்றது. டயரில் சிக்கிக்கொண்ட சிறுவன், சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினான்.

6.பள்ளிப்பருவப் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா!

இந்தியாவின் சக்திமிகுந்த, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது பள்ளிப்பருவப் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


7.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

தனியார் காப்பகம் ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய 67 வயது முதியவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.


8.கோலாகலமாகத் தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது.


9.சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எந்த அளவு முகமது அலியின் தாக்கம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள I am ali, The trials of muhammed ali போன்ற ஆவணப் படங்கள் உதவியாக இருக்கும். முகமது அலியை மிகவும் நேசித்ததன் விளைவாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை கொடுத்திருக்கிறார் பா. இரஞ்சித்.

10.டோக்கியோ ஒலிம்பிக்: 31ஆவது இடத்தில் அதானு தாஸ்

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியின் முதல் பாதி முன்னிலைப் பட்டியலில் இந்திய வீரர்கள் பின்தங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details