தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 5, 2021, 6:56 PM IST

கே.என். நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக விதிமீறுவதாக சத்யபிரத சாகுவிடம் திமுக புகார்!

சென்னை: தேர்தல் ஆணைய விதியை மீறி சமூக வலைதளங்களில் தற்போதும் அதிமுக விளம்பரம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் எதிரே 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட தலைமைத் தேர்தல் அலுவலர் அனுமதிக்கவில்லை எனக்கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்!

சென்னை: துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறை அலுவலர்கள், இருவரை கைது செய்தனர்.

நக்சல்களின் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டுவதில் அரசு உறுதி - அமித் ஷா

டெல்லி: நக்சல்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிரான போரை தர்க்க ரீதியாக முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட யோகி ஆதித்யநாத்!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

பஹார் ஜமான் தவறவிட்ட இரட்டை சதம்; வென்றெடுத்த சாதனைகள்!

ஜமான் தனது இரண்டாவது இரட்டை சதத்தைத் தவறவிட்டாலும், ஒருநாள் போட்டி வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்களை எடுத்தவர் என்ற தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.

’அலசி ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்'- மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா!

மும்பை: பாலிவுட் நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் மாலத்தீவு சென்ற ஷ்ரத்தா கபூர்: கடுப்பான சகோதரர்!

மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகை ஷ்ரத்தா கபூர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details