தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்Top 10 News @ 7 PM - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 7 pm
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்Top 10 News @ 7 PM

By

Published : Mar 28, 2021, 7:56 PM IST

செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது : மு.க.ஸ்டாலின் விமர்சனம்

உதவாக்கரை அமைச்சர் செங்கோட்டையன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சாத்தூரில் ஆடல் பாடலுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்!

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், ஆடல் பாடலுடன் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை

தாவரவியல் பூங்காவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுடன் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெறப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக புதுச்சேரி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: அத்தியாவசியப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

கரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும், முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் அலுவலரிடம் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.

நள்ளிரவில் பணப்பையை எடுத்துச் சென்ற அதிமுக நிர்வாகி - சுற்றிவளைத்த பறக்கும் படை!

நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்குப் பயந்து, வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட ரூ.16.50 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற அதிமுக நிர்வாகியைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டுத் தற்கொலை!

கரூர் அருகே கணவரின் திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

மனைவியுடன் மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஹிர்திக் ரோஷன்!

நடிகர் ஹிர்திக் ரோஷன் தனது மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

IND vs ENG சீரிஸ் டிசைடர்: இரண்டாவது இன்னிங்ஸ் 11 ஓவர்களில் 68/3

இங்கிலாந்து அணியில் மாலன் 12 (14) ரன்களோடும், பட்லர் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details