தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

By

Published : Mar 21, 2021, 7:34 PM IST

ஜெயலலிதா இறப்பிற்கு திமுகதான் காரணமா? - உதயநிதி கேள்வி

ஜெயலலிதா இரும்புப் பெண் என பெருமையாக பேசுகின்றனர். அப்படியிருக்க, திமுக தொடர்ந்த வழக்கினால் அவர் இறந்துவிட்டாரா என்ன? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

சேலம் வடக்கு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மன்சுக் ஹிரென் மரண வழக்கு: இருவர் கைது!

மன்சுக் ஹிரென் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இருவரை கைது செய்துள்ளது.

தேர்தல் விதிகளை மீறும் அலுவலர்களுக்கு தண்டனை: திமுக எம்.பி. ஈடிவி பாரத்துக்கு பேட்டி

தேர்தல் விதிகளை மீறி செயல்படும் அலுவலர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டணை பெற்றுத் தரப்படும் என திமுக எம்.பி, வில்சன் ஈடிவி பாரத்திடம் பேசியுள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல்!

தமிழ்நாடி-கர்நாடக எல்லையான தாளவாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.5 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதக்கலவரங்களை தூண்டுவது திமுகவின் கொள்கை - பொள்ளாச்சி ஜெயராமன்

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நடக்கின்றன. அதற்கு அக்கட்சியின் கொள்கையே காரணம் என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில் தீ பிடித்து எரிந்த ராஜஸ்தான் லாரி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா அசத்தல்!

உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் தொடரின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளது.

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்

'மாஸ்டர்' படத்திலிருந்து வெளியான 'வாத்தி கம்மிங்' பாடல் யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

யூ-டியூப்பில் சாதனை படைக்கும் 'எஞ்சாயி எஞ்சாமி'

'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் யூ-டியூப் தளத்தில் 44 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details