தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 7 PM - பிரதமர் மோடி வருகை

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM

By

Published : Feb 13, 2021, 7:07 PM IST

நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள்!

நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரியார் கல்லூரியில் கட்டணக்கொள்ளை; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

கரோனா காலத்தில், அரியர் தேர்வுகளை எழுத வேண்டாம் எனத் தெரிவித்து, குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்த நிலையில், மீண்டும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை கட்டச் சொல்லும் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி சென்னைக்கு வருவதையொட்டி 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமூல் தர மறுத்த உணவக உரிமையாளருக்கு வெட்டு: இருவர் கைது!

சென்னை: குரோம்பேட்டையில் மாமூல் தர மறுத்த உணவகத்தின் உரிமையாளரை வெட்டிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலத்தில் காவல்துறை சார்பாக கிரிக்கெட் போட்டி!

சேலம் : காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

சென்னை: இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

உத்தராகண்ட் தொழிலாளியிடமிருந்து அழைப்பு: நம்பிக்கையில் தொழிலாளர்களின் குடும்பம்!

டேராடூன்: உத்தராகண்ட் தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளியிடமிருந்து அவரது குடும்பத்திற்கு அழைப்பு வந்துள்ளது.

அரியர் தேர்வுக்கு 2ஆவது முறையாக கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

திருவண்ணாமலை: அரியர் தேர்வுக்கு 2ஆவது முறையாக கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் இன்று (பிப்.13) வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

ஆளுநர் மாளிகை அருகேயுள்ள தடுப்புகளை 3 நாட்களுக்குள் அகற்ற உத்தரவு!

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்டுள்ள தடுப்புகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

2ஆவது டெஸ்ட்: ரோஹித், ரஹானே அசத்தல்; இந்திய அணி முன்னிலை!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details