தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7pm - News Today

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM

By

Published : Feb 9, 2021, 7:05 PM IST

  • குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வருகின்ற மே 28ஆம் முதல் 30ஆம் தேதி வரை குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் நடைபெறும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

  • துணை மருத்துவப் படிப்பிற்கு நாளை முதல் ஆன்லைன் கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

  • நேரு குறித்து இழிவான விமர்சனம்- சர்ச்சையில் சிக்கிய ஹெச். ராஜா!

நாட்டின் முதல் பிரதமர் நேருவை இகழ்ந்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜகவின் மூத்தத் தலைவர் ஹெச் ராஜா.

  • வெட்ட வெட்ட துளிர்க்கும் கடன் செயலிகளை கட்டுப்படுத்துமா அரசு?

மின்னணு கடன்கள் தருவதாக உறுதிமொழி தரும் இந்த ஏமாற்றுக்காரர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிகள் மீறப்பட்டபோதும், அரசு விழித்துக்கொள்ளாமல் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • டெல்லி செங்கோட்டை வன்முறை: நடிகர் தீப் சித்து கைது!

குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

  • அஸ்ஸாமில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலம் பெல்குரி வனப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

  • ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து...50 பேரை காப்பாற்றிய ஓட்டுநர்!

ஆந்திராவில் தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

  • பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸில் திங்கள்கிழமை (பிப்.8) நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • ஆஸ்திரேலியன் ஓபன் : இரண்டாவது சுற்றில் நடால்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details