தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2020, 7:06 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 7PM
Top 10 news @ 7PM

'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' - சீத்தாராம் யெச்சூரி

டெல்லி: சாத்தான்குளத்தில் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

கரோனாவால் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மரணம்: நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

சென்னை: கரோனாவால் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வி.ஹெச்.பி. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை! ஆன்லைனில் உலாவும் வைரல் வீடியோ

போபால்: விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரைக் காரில் வைத்து ஐந்து பேர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பத்திரிகையாளர்கள் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டும்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: அனைத்துப் பத்திரிகையாளர்களும் தங்களது பாதுகாப்பில் கவனம்கொள்ள வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

’மருந்து தேவையில்லை, மந்திரம் சொன்னால் போதும் கரோனா ஓடிவிடும்’ - ஜீயர் கருத்தால் எழுந்த சர்ச்சை

விருதுநகர்: வீட்டில் 108 முறை ’ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மக்கள் ஜெபம் செய்தால், கரோனா தானாக ஓடிவிடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சோகம்

ஜெய்பூர்: பிரம்மபூரி பகுதியில் சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையில், மூன்று நபர்கள் சேர்ந்து, இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இது எனது இந்தியாவே இல்லை' - சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஆனந்த் மஹேந்திரா
சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக நீதி கேட்டு தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா ட்வீட் செய்துள்ளார்.

சாத்தான்குளம் விவகாரத்திற்கு குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தந்தை, மகன் சந்தேகமான முறையில் உயிரிழந்த விவகாரம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கனிலிருந்து மேலும் 4,000 படை வீரர்களைத் திரும்பப்பெறும் அமெரிக்கா?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் மேலும் நான்காயிரம் படை வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்கத் தயார் - பாகிஸ்தான்

மகாராஜா ரஞ்சீத் சிங்கின் நினைவுநாளான ஜூன் 29ஆம் தேதியன்று கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்கத் தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details